×

முந்திரியை தாக்கும் தேயிலை கொசு மழையில்லாததால் விளைச்சல் பாதிப்பு

காரைக்குடி, பிப். 27: காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முந்திரி காடுகளில் பூ பூக்கும் தருவாயில் தற்போது தேயிலை கொசு அதிகளவில் காணப்படுவதால் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் சார்பில் மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, காரைக்குடி, கல்லல், புதுவயல் ஆகிய பகுதிகளில் முந்திரி பயிரிடப்பட்டுவந்தது. தற்போது காரைக்குடி, கல்லல், புதுவயல் ஆகியபகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 2804.76 எக்டேரில் முந்திரி பயிரிடப்பட்டுகிறது.  சுமார் 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முந்திரி மரங்கள் உள்ளன. முந்திரி மரங்களை ஒவ்வொரு ஆண்டும் குந்தைதாரர்களுக்கும் ஏலம் விடப்படும். அவர்கள் தான் பயிர்களை பராமரித்து விளைச்சலை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள முந்திரி மரங்களில் தற்பொழுது பூ விடும் நேரத்தில் தேயிலை கொசு தாக்குதல் உள்ளதால், நோய் தாக்குதல் ஏற்பட்டு பூக்கள் கருகி வருகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர முந்திரி விலை உயர வாய்புள்ளது என குத்தகைதாரர்கள் தெரிவித்துள்ளனர். குத்தகைதாரர்கள் சிலர் கூறுகையில். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூ பூக்கும். மார்ச் மாதம் காய் காய்க்கும். பூக்கும் நேரத்தில் இப்பயிருக்கு மழைதேவை. ஆனால் போதிய மழை இல்லை. தற்போது தேயிலை கொசு தாக்குதல் அதிக அளவில் உள்ளது. இதனால் இலை பூ மற்றும் மொட்டு ஆகியவை வறண்டு போய் உள்ளன. இதனால் காய்ப்பு பாதிக்கப்படும். 1 மாத்திற்கு முன்பு மழை பெய்து இருந்தால் நான்றாக இருந்து இருக்கும். கொசு தாக்குதலால் பூ கருகிவிட்டது. விளைச்சல் பாதிக்கப்பட்டால் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

Tags : mantle ,
× RELATED மணப்பாறை அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி